சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தன்னை உயிருடன் தீ வைத்து எரிக்க சதி நடந்ததாக பெண் ஏடிஜிபி புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். மின் கசிவு ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக தடவியல் அறிக்கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீவிபத்து, தன்னை கொல்ல நடந்த சதி என்று அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.