Friday, March 21, 2025

ஆட்சி அமைக்கப்போவது யார்? டெல்லியில் நாளை வாக்கு எண்ணிக்கை

70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மொத்தம் 699 பேர் போட்டியிட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நாளை காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாலை 6:30 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு என்னும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news