அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் டீசல் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக டீசல் பேருந்துகளை சி.என்.ஜி (CNG) கேஸ் எரிபொருள் முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 1000 பேருந்துகளை சி.என்.ஜி பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.