Thursday, February 19, 2026

இறந்து போன ராணுவ வீரர் : 16 ஆண்டுகள் கழித்து உயிருடன் வந்ததால் பரபரப்பு

ஹிமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து பதன்கோட் நீதிமன்றத்தில் சுரீந்தர் சிங் ஆஜராகியிருப்பது அதிகாரிகளையும், குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மனைவி மீனா குமாரி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கிற்கு பயந்தே இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ராணுவத்தால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க விரும்பிய சுரீந்தர் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2009ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் பழைய நினைவுகளை இழந்து விட்டதாகக் கூறிய அவர், சமீபத்தில் தான் நினைவு திரும்பியதாகவும் சுரீந்தர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News