Friday, December 5, 2025

டிட்வா புயல் : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலால் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிறது மழை. இன்றும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News