கண்ணாடி அணிந்தால் கூடுதல் பால் சுரக்கும் மாடுகள்

248
Advertisement

பசுக்களுக்கு கண்ணாடி அணிந்தால், அதிகமான பால் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் பாட்டுப்பாடியே பசுவிடம் பால் கறந்து அசத்தியிருப்பார். நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்த அந்தக் காட்சியைத் தற்போது மிஞ்சிவிட்டது துபாயில் உள்ள விவசாயி ஒருவர் செய்த செயல்.

தனது பசுக்களுக்கு வர்ச்சுவல் கண்ணாடி அணிந்து அதிகமான பாலைக் கறந்து ராமராஜனையும் மிஞ்சிவிட்டார்.

அந்த விவசாயி செய்த சுவாரஸ்ய செயலைப் பார்ப்போம், வாருங்கள்…

துருக்கியைச் சேர்ந்தவர் இஷத் கோகாக். விவசாயியான இவர். தனது 2 பசு மாடுகள் புல்வெளியில் இருப்பதாக நினைக்க வைக்க வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகளை மாட்டியுள்ளார். அதன்பலனாக, தினமும் 5 லிட்டர் அதிகமான பால் தரத் தொடங்கின. அதாவது, தினமும் 22 லிட்டர் பால் தந்த அவை 27 லிட்டர் தரத்தொடங்கின..

இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை விவரிக்கிறார் இஷத்.

வர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அணிந்தவுடன் பசுக்கள் ஒரு பசுமையான மேய்ச்சல் நிலத்தைப் பார்ப்பதாக உணர்கின்றன. அது அவற்றுக்கு ஊக்கமளிக்கிறது, மன அழுத்தத்தையும் குறைக்கிறது என்று கால்நடை மருத்துவர்போல் பேசுகிறார் இஷத்.

இதற்குமுன்பு பாரம்பரிய இசையைப் பயன்படுத்தி பால் உற்பத்தியை அதிகப்படுத்திய இஷத் தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.
இஷத்தின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.