Wednesday, March 26, 2025

சீமான் வீட்டு காவலாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டில், வளசரவாக்கம் போலீசார், ‘சம்மன்’ ஒட்டினர்.

சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டுக் காவலாளியான அமல்ராஜ் ஆகியோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சுபாகர், அமல்ராஜ் ஆகியோரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சீமான் வீட்டு காவலாளிகள் இருவருக்கும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Latest news