”கட்டிப்பிடிக்க முடியவில்லையே…”
தனிமையில் கதறி அழுதத் தமிழ் நடிகை !

193
Advertisement

தனியறையில் தமிழ் நடிகை கதறியழுத சம்பவம்
திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் தனிமைப்படுத்திக்கொள்வதை
அரசும் மருத்துவ உலகமும் வலியுறுத்தி வருகிறது.
இதனைப் பலரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தத் தனிமையைப் பலரும் கஷ்டமாக உணர்ந்து
வருகின்றனர். இவர்களில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவும்
ஒருவர்.

Advertisement

இவர் தமிழில் ஜி-வி. பிரகாசுடன் ‘வாட்ச்மேன்’,
ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’, வருணுடன் ‘பப்பி’
ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சம்யுக்தாவுக்கும் அவரது பெற்றோருக்கும் கடந்த
ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால்
மூவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா சமூக வலைத்தளத்தில்
கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ”கொரோனா தொற்றால் சுவை, வாசனை
உணர்வை இழந்துள்ளேன். நான் உதவியற்றவளாக
உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை
இழந்துவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது.
மரண பயம் கொடுமையானது. எனது அறையில்
அடைப்பட்டு அழுதேன். என் அம்மாவைக்
கட்டிப்பிடிக்க முடியவில்லை” என்று கவலையுடன்
குறிப்பிட்டிருந்த சம்யுக்தா, ”நம்மில் பலர் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துவதில்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல
உணவுப் பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகமாகும்” என்று நம்பிக்கையூட்டும் விதமாக
அக்கறையுடன் பதிவிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களிலும் தமிழ்
ரசிகர்கள் மத்தியிலும் அலைஅலையாய்ப் பரவி
வருகிறது.