காதலை உருவாக்கிய கொரோனா

272
Advertisement

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சந்திப்பால், பார்வையற்ற இளைஞரைத் திருமணம் செய்யவுள்ள இளம்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

கடந்த இரண்டாண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அநேகம்பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இருவரைத் தம்பதியாக்கியுள்ளது கொரோனா ஊரடங்கு.

சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண் ஜாவோ ஜியாவோக்கிங். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வேறு ஒரு நகரத்தில் வசிக்கும் ஜாவோ ஃபெய் என்ற பார்வையற்ற இளைஞரை இரண்டாவது முறையாக சந்திக்கச் சென்றார். அப்போது திடீரென்று சீனாவில் மீண்டும் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், உடனடியாக வீடு திரும்ப இயலாத அப்பெண் இளைஞரின் வீட்டில் சில வாரங்கள் தங்க நேர்ந்தது.

Advertisement

இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். ஒரு கணம் தயங்கிய அப்பெண், முதன்முறையாக சந்தித்தபோது தனது பெறோருக்கு ஃபெய் அளித்த பூக்கள், பரிசுகள் ஆகியவற்றால் மனம் மாறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஃபெய்மீது காதல்கொண்டாள். காதல் பூ பூக்கத்தொடங்கி நறுமணம் வீசத் தொடங்கியது. உடனடியாக நிச்சயதார்த்தமும் நடந்தது. இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் அந்த இளம்பெண்.