செல்போனில் கொரோனா பரிசோதனை 20 நிமிடங்களில் முடிவு

234
Advertisement

செல்போன்மூலம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்ள பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதனை மனதில்கொண்டு வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதுவித செல்போனை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் மூலம் 20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்துவிடலாம்.

இந்தப் பரிசோதனையின் முடிவுகள் துல்லியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்தே பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விரைவில் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.