குக் வித் கோமாளி சர்ச்சை! ஷிவாங்கிக்கு சாதகமாக செயல்படும் நடுவர்கள்?

146
Advertisement

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ‘குக் விட் கோமாளி’.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர்.கடந்த 3 சீசன்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறினார்.இந்நிலையில் முதல் ஆளாக இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் சிவாங்கி.

கடந்த சீசன் வரை சமையல் பற்றி ஒன்றுமே தெரியாத ஷிவாங்கி, எப்படி இறுதிப்போட்டிக்கு தேர்வானார் என்று பலரும் கேள்வி எழுப்பினர், நடுவர்கள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.

இது குறித்து பேசிய செஃப் வெங்கடேஷ் பட், “அப்பா – மகள் போல சிவாங்கியுடன் பழகினாலும் அந்த போட்டிக்கு வெளியே தான். போட்டியில் அவர்கள் சமைப்பதை வைத்து தான் தீர்ப்பு வழங்கப்படுகிறது” என்றார்.