Thursday, February 19, 2026

அசுத்தமான குடிநீர் குடித்த 3 பேர் உயிரிழப்பு ; 100 பேர் மருத்துவமனையில் அனுமதி

மத்திய பிரதேசத்தில் அசுத்தமான குடிநீர் குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தூய்மையான நகரம் என அழைக்கப்படும் இந்தூரில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் பாகீர்த்புரா பகுதியில், கடந்த 25ம் தேதி வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் துர்நாற்றத்துடன் இருந்துள்ளது.

அசுத்தமான குடிநீரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 12 ஆயிரம் பேரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

Latest News