ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை ஈரோட்டில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு அருகே சீமான் பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார் இரு கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.