Thursday, March 20, 2025

ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் சர்மா குண்டாக இருக்கிறார் எனவும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மோசமான கேப்டன் என அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் கருத்திற்கு பாஜக தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் கட்சி அந்த பதிவை நீக்கும்படி கூறியிருக்கிறது. இதையடுத்து, அந்த பதிவை ஷாமா முகமது நீக்கிவிட்டார்.

இதுகுறித்து விளக்கமளித்த ஷாமா முகமது : “நான் அவரை உருவக்கேலி செய்து பதிவிடவில்லை. ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அதுகுறித்துதான் நான் பதிவிட்டேன்” என விளக்கம் அளித்திருந்தார்.

Latest news