ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே காமராஜர் நகர், நான்காவது தெரு பிரதான சாலையில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் இரண்டு மாணவர்கள் சென்றுள்ளனர்.
இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். செல்போனில் வீடியோ எடுப்பதை அறிந்த மாணவர்கள் இருவரும் பேருந்தில் இருந்து குதித்து ஓடினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது