காதுக்குள் புகுந்த கரப்பான் பூச்சி

167
Advertisement

இளைஞர் ஒருவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி புகுந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜேன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவர், சமீபத்தில் நீச்சல் குளத்திற்கு நீந்தச் சென்றார்.

நீந்தி முடிந்ததும் காது வலியால் அவதிப்படத் தொடங்கினார். விரைவாக நீந்தியதால் காதுக்குள் தண்ணீர் புகுந்திருக்கலாம் என்று கருதிய அவர், அதைப் பொருட்படுத்தாமல் உறங்கச் சென்றுவிட்டார்.

Advertisement

அடுத்த நாள் காலையில் காது அடைப்புடன் இருப்பதைப் போன்று வித்தியாசமாக உணர்ந்தார். அதேசமயம், காதில் வலி அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், மருத்துவமனைக்குச் சென்று காதில் ஊசி செலுத்திக்கொண்டார். மருத்துவர் ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்கினார்.

அத்துடன், தலையை ஒருபக்கமாக சாய்த்து வைத்துப் படுக்குமாறு அறிவுறுத்தினார். அப்படிச் செய்தும் காது வலி நீங்காமல், அவதிப்பட்டார். நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவித்தார்.

இதனால், படுக்கையிலிருந்து எழுந்து நன்கு குதிக்கத் தொடங்கினார், சூயிங்காம் மெல்லத் தொடங்கினார். சிறிது தூரம் வேகமாக ஓடினார். தலையை நன்கு சுற்றினார். எப்படிச் செய்தும் காது வலி நீங்கவுமில்லை, குறையவுமில்லை.

ஒரு வாரம் கழித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சென்றார். அவரது காதை டாக்டர் பரிசோதித்தபோது உள்ளே கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதைப் பார்த்தார்.

ஐந்தே நிமிடங்களில் அந்தக் கரப்பான் பூச்சியை டாக்டர் வெளியே எடுத்துவிட்டார். அதன்பிறகு, வலி நீங்கினார் ஜேன்.

தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் ஜேன்.