தமிழகம் முழுவதும், நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகின்றன.
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுத இருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தேர்வை கண்காணிக்க சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் பணியில் ஈடுபட உள்ளனர்.