இது சப்பாத்தி கட்ட ஸ்டைல் அரபிக் குத்து

248
Advertisement

Beast படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் கூட, அப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவி, தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

பலரும் இப்பாடல்களை பாடியும் ஆடியும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், நான்கு சிறுவர்கள் இட்லி தட்டு, வாட்டர் கேன் மற்றும் சப்பாத்தி கட்டை ஆகியவைகளை இசைக்கருவி போல பயன்படுத்தி அரபிக் குத்து பாடலை பாடி அசத்தி உள்ளார்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.