மீடியாவைக் கண்டித்த முதலமைச்சர்… நடந்தது என்ன?

344
Advertisement

”பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று மீடியாவைக் கண்டித்துள்ளார்
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதிசெய்துகொண்ட
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மருத்துவர்கள் அறிவுரைப்படி,
மேடக் மாவட்டம், எர்ரப் பள்ளியிலுள்ள தனது பண்ணை வீட்டில்
தனிமைப்படுத்திக்கொண்டார்.

2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் தனக்கு ஏற்பட்ட தொற்றிலிருந்து
சந்திரசேகர ராவ் விடுபட்டுவிட்டார்.

இந்த நிலையில் வாராங்கல் பகுதியில் 21-6-2021, திங்கள்கிழமை
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது பத்திரிகையாளர்
களைக் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாகக் கூறியுள்ள முதலமைச்சர் சந்திரசேகர ராவ்,
”மருத்துவர்கள் அறிவுரைப்படி, பாராசிட்டமால் மற்றும் நோய்
எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டதால். ஒரே வாரத்திலேயே
கோவிட் தொற்றிலிருந்து மீண்டுவந்துவிட்டேன்.

ஆனால், மீடியா தவறான தகவல்களையும், பொதுமக்கள் மத்தியில்
கோவிட் பற்றிய பயத்தையும் பரப்ப முயல்கிறது. மீடியா பொறுப்புடன்
நடந்துகொள்ள வேண்டும்”என்று கடுமையாகவும் வருத்தமுடனும் கூறினார்.

தெலுங்கானா முதலமைச்சரின் இந்த ஆவேசப் பேச்சு சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.