தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் அரங்கத்திற்குள் செல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதிற்கு த.வெ.க தலைவர் விஜய், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளது.
. @TVKVijayHQ இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் தவெக நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் pic.twitter.com/7MXH92n0ej
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) February 26, 2025