நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டை வரவேற்க சென்னை காமராஜர் சாலையில் வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் இனிப்புகளையும் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.