கழுத்து இறுக்கி தொட்டிலில் உயிரிழந்த குழந்தை

339

சென்னையை அடுத்த திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்த தீபக் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் அறையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென தீபக் கழுத்தில் புடவை இறுக்கி தொங்கிய நிலையில் உயிரிழந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தீபக்கை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.