Sunday, December 28, 2025

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் – வெளியான புது தகவல்

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது.

சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் பரப்பில் அமைத்து வருகிறது. கடந்த 2024 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, அதாவது 2025 அக்டோபரில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News