தமிழ்நாட்டில் உள்ள 179 நீதிமன்ற வளாகங்களில் சி.சி.டி.வி. பொருத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடிதம் எழுதி உள்ளது.
வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த 7ஆயிரத்து 800 சிசிடிவி மற்றும் மானிட்டர்கள் பொருத்த உள்ளோம் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.
இதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பதிவுத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.