பிரபல பாடகியின் பாடலை பாடி அசத்தும் குட்டி பூனை

220
Advertisement

இணையத்தில் குறும்பு பூனைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. நாய்களுக்கு அடுத்ததாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவது பூனைகள் தான். ஒரு குழந்தையை போல குறும்புத்தனம் செய்துகொண்டே இருக்கும்.

அச்சமயத்தில் , கோவத்தை விட அது செய்யும் குறும்பு தனத்தை ரசிக்கும் தருணம் தான் அதிகம். இணையத்தில் இதுபோன்ற வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இணையவாசிகளின் கவனத்தை ஈந்துவரும் இந்த வீடியோவில்,

Advertisement

https://www.instagram.com/p/CbeYVy9OVOU/

பிரபல ஆங்கில பாடகியான அடீல்ன் ” ஈஸி ஆன் மீ ” என்ற பாடலை படுவது போல உள்ளது. அந்த பாடலில் வரும் ராகத்தோடு ஒத்துபோகும் பூனையின் குரல் கேட்போரை ரசிக்கவைத்துள்ளது . பென்னி என்ற இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராமில் 4.4 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.