Friday, April 18, 2025

பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 1,078 பேர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில் ஊழலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற பாஜக வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கூடுதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1,078 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Latest news