Monday, April 28, 2025

வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – மு.க.ஸ்டாலின்

வக்பு சட்டத்திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரித்தார். வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு போராடும், வெற்றிபெறும் என உறுதியளித்தார். மேலும் வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என அறிவித்தார்.

Latest news