டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை நேற்று எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
மாலை 6 மணியாகியும் தங்களை ஏன் விடுவிக்கவில்லை எனக் கூறி அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது : “நாட்டுக்காக போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலில் இருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டிலேயே மிசாவில் கைதாகி சிறையில் கழித்தவர்.” என கூறியுள்ளார்.