நாட்டில் புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான, தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டு வரும். 9 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதி உடையவர்கள் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப் ஜாதவ் தெரிவித்துள்ளார். மேலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.