Saturday, August 23, 2025
HTML tutorial

சுகர் இருக்கவங்க பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.? இதை தெரிந்துகொள்ளுங்கள்

பேரீச்சம் என்பது இனிப்பு நிறைந்த பழம் மட்டுமல்ல, அதன் ஊட்டச்சத்து அளவுகள் மிகவும் வளமானவை. இதனால் ஆப்பிளைப் போலவே தினமும் ஒரு பேரீச்சம் பழம் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஃபினோலிக்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்டு கலவையும் இதில் காணப்படுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மூளை, இதயம், எலும்பு போன்ற முக்கிய உறுப்புகளுக்கு பலனளிக்கிறது.

பேரீச்சத்தின் இனிப்பு சுவை காரணமாக, சர்க்கரை நோயாளிகள், அதை தவிர்க்க நேரிடுகின்றனர். சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம்தான் இதற்கு காரணம். ஆனால் இரைப்பை குடல் மருத்துவர் ஜோசப் சல்ஹப் இந்தப் பகுதியை மறுத்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “100 கிராம் பேரீச்சத்தில் 54 கிராம் சர்க்கரை இருந்தாலும், அது உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் உயர்த்தாது” என்று கூறியுள்ளார்.

இதற்கு காரணமாக௧கிளைசமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) குறைவாக இருப்பதையே அவர் எடுத்துக் காட்டியுள்ளார். கிளைசமிக் இன்டெக்ஸ் என்பது எந்த உணவு எவ்வளவு விரைவில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதை காட்டும் அளவுகோல் ஆகும். சர்க்கரை நோயாளிகள் குறைந்த அல்லது மிதமான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளையே பொருத்தமாக உண்க வேண்டும். அதில் பேரீச்சம் பழம் குறைந்த அளவிலான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்டதால், சர்க்கரை அளவை அதிகரிக்காது.

பேரீச்சம் பழத்தின் இனிப்பு சுவை எந்த விதமான ஆபத்தையும் உருவாக்காது. மாறாக, அது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான தரும் உணவாகும் என்று மருத்துவர் ஜோசப் சல்ஹப் கூறுகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News