செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன் 25 மற்றும் அவரது நண்பர் சக்கரை 27. இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர்
இந்த நிலையில் இருவரும் மறைமலைநகர் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்பு மது அருந்திவிட்டு உணவு சாப்பிடுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு பொத்தேரி நோக்கி சென்றுள்ளனர்
அப்போது மறைமலைநகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரியில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் இருந்த வாலிபர்கள் சிக்னலை மதிக்காமல் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது அரசு பேருந்து மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.