Wednesday, March 26, 2025

ஜே.சி.பி இயந்திரம் மூலம் 25க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கிய சிறுவன்

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் 17வயது சிறுவன் நள்ளிரவில் 3 மணி JCB வாகனத்தை எடுத்து செல்லூர் 50அடி சாலையில் சென்றுள்ளான். அப்போது சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், பைக்குகள் என 25க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கியதில் வாகனங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது.

இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூர் பகுதியில் இரவு நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், சிறுவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு அதிக அளவிற்கு கஞ்சா , போதை பவுடர் போன்ற போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாலும் இதுபோன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Latest news