பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ‘எங்கள் தங்கம்’… ஓடிடி அப்டேட்…

நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் படமாக உருவெடுத்துள்ளது. உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. இதன்படி, வரும் ஜூலை 17, 2026 முதல் தெலுங்கு மொழியில் ‘எங்கள் தங்கம்’ (மா இன்டி பங்காரம்) திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, விரைவில் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ பேனரில் தயாரித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் இந்தப் படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு படத்தின் கிரியேட்டராக செயல்பட்டுள்ள நிலையில், நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இந்த கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வழங்கிய பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், ஜூலை 17 முதல் ஓடிடியிலும் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.

Related News

Latest News