மத்திய அரசு கொண்டுவந்த மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசிய போது கூட்டம் கலைந்து சென்றது. இதனை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர்களின் கேமராக்களை பிடுங்கி அதில் இருந்த போட்டோ மற்றும் வீடியோவை அழித்ததாகக் கூறப்படுகிறது.
பாஜகவினர் செய்தியாளர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.