Friday, April 18, 2025

டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டுவதற்காக வந்த பாஜகவினரின் கையில் இருந்த முதலமைச்சரின் புகைப்படத்தை பறித்த திமுகவினர், அண்ணாமலையின் புகைப்படத்தை கொடுத்து ஓட்டுமாறு கூறியுள்ளனர். இதனால், திமுக, பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 16 பாஜகவினரை கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Latest news