Friday, January 24, 2025

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு பயப்படுகிறது : பிரியங்கா காந்தி

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு பயப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, அதானி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பைகளை அணிந்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பிரியங்கா காந்தி, ‘அதானி லஞ்சம் குறித்து விவாதிக்க பாஜகவினர் பயப்படுகின்றனர் என்றும் தான் நாடாளுமன்றத்திற்கு புதிதாக வந்திருக்கிறேன்.நாடாளுமன்றத்தில் இதுவரை பிரதமர் மோடியைப் பார்க்கவில்லை எனவும் கூறினார்.ஒவ்வொரு நாளும் அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்த தாங்கள் முயற்சித்தபோதும் பாஜக விவாதம் நடத்த விரும்பவில்லை என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

Latest news