மக்கள் தொகையை மிஞ்சிய பறவைகள்!

369
Advertisement

இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு நன்கு
உதவுபவை பறவைகளே. காக்கா கூட்டத்தின்
பகிர்ந்துண்ணும் நற்குணத்தை உதாரணம்
காட்டாத மனிதர்கள் எவருமுண்டா?

உலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில்
பறவைகளின் பங்கு முக்கியமானது.

மனிதர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைப்போல
புறாவையும் தங்கள் இல்லங்களில் வளர்த்து அவற்றைத்
தங்களின் குடும்ப உறுப்பினர்களாகப் பேணிக் காத்து
வருகின்றனர். இதனால், பறவைகளின் எண்ணிக்கையைக்
கணக்கிட முடிவுசெய்தது அமெரிக்கா.

இங்குள்ள கார்னெல் பல்கலைக் கழகம் இதற்கு முன்வந்தது.
பூமியில் பன்முகத் தன்மை உள்ளதைக் கணக்கிட்டு அவற்றைப்
பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக்கொண்டு இயங்கிவருகிறது
கார்னெல் பல்கலைக் கழகத்தின் பறவையியல் துறை.

ஒவ்வோராண்டும் மே மாதம் 10 ஆம் நாள் உலகப் பறவைகள்
தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கார்னெல்
பல்கலைக் கழகம் அண்மையில் உலகம் முழுவதுமுள்ள பறவைகளின்
எண்ணிக்கையைக் கணக்கிட்டது.

இதற்காக, உலகம் முழுவதும் உள்ள பறவைகள் ஆர்வலர்களைத்
தொடர்புகொண்டு விவரங்களை சேகரித்தனர்.

இந்தக் கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 50 (5 ஆயிரம் கோடி)
பில்லியன் பறவைகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும்,
உலகம் முழுவதும் 9 ஆயிரத்து 700 வகைப் பறவையினங்கள்
உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவற்றில் 92 சதவிகிதப் பறவையினங்களே தற்போது உயிரோடு
இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியாவில் ஆயிரத்து 314 பறவையினங்கள்
இருப்பதாகவும், இதில் 34 வகையான பறவைகள் உலகம்
முழுவதும் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

பறவைகள் பற்றிய இந்த ஆய்வில் இன்னொரு சுவாரஸ்யமான
தகவலும் தெரியவந்தது. அது என்ன தெரியுமா..?

பெரும்பாலான பறவைகள் பாடியே தங்கள் மனைவியைத்
தேர்வுசெய்து கொள்கின்றனவாம். சத்தமாகப் பாடும் பறவையைக்
கண்டுதான் பெண் பறவைகள் மயங்குகிறதாம்.

மனித ஜனத் தொகையான 767 கோடியை மிஞ்சி சாதனை
படைத்துள்ளது பறவையினம். அண்மையில், ஜனத்தொகை
குறைந்துபோனதாகக் கூறி சீனா ஒவ்வொரு பெற்றோரும் 3
குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதியளித்தது.

இதற்குமுன் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதித்திருந்தது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
விசித்திர உலகமப்பா..!