பெங்களூரு, சாம்ராஜ்பேட்டையில் கர்ணன் என்பவருக்கு சொந்தமான மாட்டின் மடிப்பகுதியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் பசுக்கள் வலியால் துடி துடித்தன. இரவு முழுக்க பசுக்கள் கத்திக் கொண்டிருந்தன.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரித்தனர்.இதைத் தொடர்ந்து, விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஷேக் நஸ்ரு என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குடிபோதையில் மூன்று மாடுகளின் மடிகளை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த நபர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.