பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் வெற்றியாளராக மகுடம் சூடிய முத்துக்குமரன் ஜெகதீசன் மீது, இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா அக்தர் முன்வைத்துள்ள பாலியல் மற்றும் மோசடிப் புகார்கள் தமிழகத்தையே அதிரவைத்துள்ளன.
மேடைகளில் அடுக்கு மொழியில் பேசி பல லட்சம் ரசிகர்களைக் கவர்ந்த முத்துக்குமரன், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வஹிதா வெளியிட்ட வீடியோ ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
ஆனால், இப்போது ஒரு முக்கியத் திருப்பமாக, சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வீடியோ வஹிதாவின் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இது பல கேள்விகளையும், மர்மங்களையும் எழுப்பியுள்ளது.
வஹிதா தனது வீடியோவில், தான் மனமுடைந்து இருந்த நேரத்தில் சென்னையில் முத்துக்குமரனைச் சந்தித்ததாகவும், தனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது தெரிந்தும் அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால், அடுத்த நாளே முத்துக்குமரன் தனது பேச்சை மாற்றிக்கொண்டு, திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறித் தன்னைத் தவிக்க விட்டதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, வஹிதா விபரீத முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது வஹிதா அக்தர் தனது நண்பர்களால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். =
இருப்பினும், தற்கொலை முயற்சிக்குக் காரணமாகத் தான் பதிவிட்ட வீடியோவை அவர் ஏன் நீக்கினார்? அல்லது யாராவது அவரை அழுத்தம் கொடுத்து நீக்கச் செய்தார்களா? என்ற கோணத்தில் இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன.
வஹிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த மற்ற பழைய பதிவுகளும் மாயமாகி இருப்பது, இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு பெரிய பின்னணி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் முத்துக்குமரன் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், “நானும், வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை.
அதுகுறித்துதான் கிளாரிட்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டிஸ்டர்பாக இருந்தார்” என குறிப்பிட்டிருக்கிறார்.இந்தச் சர்ச்சையின் அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் முத்துக்குமரன் தரப்புப் பதில் என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
