Tuesday, January 20, 2026

அதிரடியாக வட்டியை குறைத்த வங்கிகள்.., குறிச்சு வச்சுக்கோங்க!

இந்தியாவின் முக்கிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கியும், எச்டிஎஃப்சி வங்கியும், தங்களின் நிலையான வைப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் — இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அதன் அடிப்படை வட்டி விகிதங்களை குறைத்திருப்பதே ஆகும் . இதன் பின்விளைவாகவே பல வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வர ஆரம்பித்துள்ளன.

முதலில், ஐசிஐசிஐ வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் மே 27, 2025 முதல் நடைமுறையில் வந்துள்ளன. இந்த வங்கி, தனது FD விகிதங்களை 20 basis points குறைத்துள்ளது. இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு, 3 சதவீதம் முதல் 6.85 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதில், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD-க்கே அதிகபட்சமாக 6.85 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் FD-யில் முதலீடு செய்தால், கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

அதேபோல், HDFC வங்கியும் தனது FD வட்டி விகிதங்களை சமீபத்தில் திருத்தியுள்ளது. இந்த புதிய விகிதங்கள் மே 23, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த வட்டி மாற்றங்கள், எப்போதும் முதலீடுகளுக்குப் பாதுகாப்பாக கருதப்படும் FD-க்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு முக்கியமான செய்தியாகும்.

இதனால், FD-யில் முதலீடு செய்ய திட்டமிடும் அனைவரும், தற்போதைய வட்டி விகிதங்களை நன்கு ஆய்ந்து, அவசியமான ஆலோசனைகளுடன், அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டியது மிக அவசியம்.

அதனால்… வட்டி விகிதம் குறைந்திருக்கும் இந்த சூழ்நிலையை, உங்களுடைய சேமிப்புத் திட்டங்களில் கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! குறிச்சு வச்சுக்கோங்க!

Related News

Latest News