Friday, March 21, 2025

ஹோட்டல்களில் இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்த தடை

கர்நாடகாவில், ஹோட்டல்களில் இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை துணி போட்டு வேகவைப்பதற்கு பதிலாக பாலிதீன் போட்டு அதன் மீது இட்லி மாவு ஊற்றி வேக வைக்கப்படுகிறது. இதில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சுமார் 51 உணவக இட்லி மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

Latest news