விஞ்ஞானத்துடன் விளையாடும் வீர சிம்மா ரெட்டி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

24
Advertisement

மகர சங்கராந்திக்காக தெலுங்கு மொழியில் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டர் வீரய்யா’ மற்றும் பால கிருஷ்ணா நடிப்பில் ‘வீர சிம்மா ரெட்டி’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டுமே typical மசாலா formula படங்கள் என்றாலும் வீர சிம்மா ரெட்டி படத்துக்கே அதிக வரவேற்பு இருப்பதாக பிரபல தெலுங்கு சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அதிலும், இந்த படம் முந்தய பாலகிருஷ்ணா படங்களை விட அதிக collectionஐ குவித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்திலும் வில்லனின் அடியாட்களை பாலகிருஷ்ணா பந்து போல சுழற்றி சுழற்றி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Advertisement

அதிலும், அவர் கோபத்தில் காரை எட்டி உதைப்பது போல அமைந்துள்ள காட்சியில், கார் அப்படியே reverseஇல் செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

எது எப்படியோ, அமெரிக்க திரையரங்கில் அதிக சத்தம் போட்டு மற்ற மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, காட்சி ரத்தாகும் அளவுக்கு சத்தம் போட்டு அவரின் ரசிகர்கள் வீர சிம்மா ரெட்டி படத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.