டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இதில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.
இதில், தற்போதைய நிலவரப்படி அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜகவின் பர்வேஷ் ஷர்மா முன்னிலை பெற்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு சந்தித்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.