சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் சென்னை மத்திய குற்றப்பிரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சுமதி, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, ரேபிடோ செயலி மூலம் ஆட்டோ புக் செய்துள்ளார். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், சாதாரண உடையில் இருந்த பெண் ஆய்வாளர் சுமதியிடம், ஆன்லைனில் காட்டும் கட்டணத்தை விட 20 ரூபாய் அதிகம் தர வேண்டும், இல்லையென்றால் கேன்சல் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், ஆய்வாளர் சுமதியை ஆட்டோவில் இருந்து இறங்கும்படி கூறியுள்ளார். சுமதி ஆட்டோவில் இருந்து இறங்க முற்பட்டபோது, அவர் வேகமாக ஆட்டோவை எடுத்ததால், சுமதி தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதுகுறித்து, சுமதி காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்தனர்.