தங்கக் கடன் வாங்குபவர்களே உஷார்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தியாவில் தங்கம் விலை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையிலும், முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் தனது நகைக்கடன் வியாபாரத்தை பலமடங்கு விரிவுபடுத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

மற்ற வங்கிகள் நகைக்கடன் வழங்குவதில் தற்போது தயக்கம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீராம் பைனான்ஸ் மட்டும் ஏன் இவ்வளவு தைரியமாக இந்த முடிவை எடுத்துள்ளது என்பது நிதிச் சந்தையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்நிறுவனத்தின் நகைக்கடன் மதிப்பு சுமார் ஒன்பதாயிரம் கோடியை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த இரண்டாவது காலாண்டு வருவாய் ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் உமேஷ் ரேவன்கர், வாடிக்கையாளர்களைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் தங்கத்தை முறையாக மதிப்பிடும் வரை நகைக்கடனில் எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொதுவாக நகைக்கடன் வாங்குபவர்கள், கடன் முதிர்வடையும் போது அசல் மற்றும் வட்டியை மொத்தமாக செலுத்தும் முறைக்கே அதிகம் பழகியுள்ளனர். ஆனால், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் தற்போது இஎம்ஐ மற்றும் மாத வட்டி செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியதால், பலர் வட்டியைக் கட்ட மறந்து கடனை நிலுவையில் வைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தொண்ணூறு நாட்களுக்கு மேல் வட்டி கட்டாத வாடிக்கையாளர்களின் கடன்கள் தாமதமானதாக அறிவிக்கப்படும். எனினும், அந்த கடனுக்கான தங்க நகைகள் நிறுவனத்திடம் பத்திரமாக இருப்பதால், தேவைப்பட்டால் அந்த நகைகளை ஏலம் விட்டு பணத்தை வசூலித்துக் கொள்ள முடியும் என்பதால் இதில் நிறுவனத்திற்கு எந்தவொரு இழப்பும் இல்லை என அவர் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, சந்தையில் நகைக்கடன் மீதான வட்டி மற்றும் அசல் தொகை சேர்த்து, அடமானம் வைக்கப்பட்ட நகையின் மதிப்பில் எழுபத்தி இரண்டு முதல் எழுபத்தி மூன்று சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

மழைப்பொழிவு குறைவு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி பதினைந்து முதல் பதினேழு சதவீதமாக சற்று குறைய வாய்ப்பிருந்தாலும், நகைக்கடன் சந்தையில் ஸ்ரீராம் பைனான்ஸ் ஒரு மாபெரும் லாபத்தை ஈட்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related News

Latest News