இந்தி மொழி என்று சொன்னால் விரட்டி விடுவார்கள் என்ற காரணத்தினால், மூன்றாவது மொழி என்று பின் வாசல் வழியில் வருகிறார்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது மொழியாக வேற்று மொழியை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். அந்த வேற்று மொழி இந்தி மொழியாகத் தான் இருக்க முடியும் என்று கூறினார். இந்தி மொழி என்று சொன்னால் விரட்டி விடுவார்கள் என்ற காரணத்தினால்தான், தற்போது மூன்றாவது மொழி என்று பின் வாசல் வழியில் வருகிறார்கள். இவர்களது சூழ்ச்சி தெரியாத ஆட்கள் நாம் கிடையாது. ஏனென்றால் நாம் போட்டுக் கொண்டிருப்பது பெரியாரின் கண்ணாடி என்று தெரிவித்தார்.