Monday, February 10, 2025

சென்னை புத்தக காட்சியில், ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

பபாசி நடத்திய 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கியது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்த நிலையில், 17 நாட்களக நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நிறைவு பெற்றது. இந்த நிலையில், புத்தகக் காட்சி தொடங்கியதில் இருந்து, நிறைவு பெற்றது வரை மொத்தம் 20 லட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வந்ததாகவும், சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.

Latest news