ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதுடன், கற்களும் வீசப்பட்டன.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
அடுத்த மாதம் டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.