உலர் திராட்சை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கிறது, மேலும் எப்போது வேண்டுமானாலும் உலர் திராட்சையைக் கொஞ்சம் எடுத்து மினி Snack- போல் சாப்பிடலாம் .
அதுபோல பல விதமான பேக்கரி உணவுகள், இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில், உலர் திராட்சைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்குத் தேவையான முழு ஊட்டச்சத்துக்களும் உடலுக்குத் தேவை என்று நினைப்பவர்களுக்கு, உலர் திராட்சை மிக எளிய மற்றும் சுவையான உணவாக அமைகிறது. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உலர் திராட்சையை சாப்பிடலாம் வேண்டாமா என்று கேள்வி இருக்கிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தின் படி சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம், உலர் திராட்சைகளும் மற்ற பழங்களின் பண்புகளைக் கொண்டுள்ளது, இதில் இயற்கையான இனிப்பு சுவை மற்றும் கார்போஹய்ரேட்டுகள் நிறைந்து இருக்கிறது, மேலும் வைட்டமின்கள் ஃபைபர் (Fiber), மினரல்ஸ் அதிகம் இருக்கிறது,, ஆனால் சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சையோடு சேர்த்து உட்கொள்ளும் கார்போஹய்ரேட்டுகளின் அளவில் கவனம் தேவை, இதனைத் தவிர்த்து உலர் திராட்சையைச் சரியான அளவில் எல்லோரும் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.