சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், ஞானசேகரன் மிரட்டவும் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியபோது அவரது தோழியும் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.